பண்டுதகாரன் புதூர்-சரக்கு வாகனம் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்து.
சற்று முன் சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த அசோக் லேலண்ட் படதோஸ்த் வாகனம் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பண்டுதகாரன் புதூர் என்ற இடத்தில் வரும் போது வாகனத்தின் பின் டயர் திடீரென வெடித்ததால் நிலை தடுமாறி வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
மேலும் இந்த வாகனத்தில் கொண்டுவரப்பட்ட சுமார் இரண்டு டன் எடை கொண்ட தக்காளி சாலையில் கொட்டி வீணானது.
இந்த சம்பவம் அறிந்த ஹைவே பெட்ரோல் வாகனத்தில் பணியாற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
சரக்கு வாகனம் கவிழ்ந்தாலும் அதில் பயணித்த யாருக்கும் தெய்வா தினமாக காயம் ஏற்படவில்லை.
எனவே சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் கவிழ்ந்து தக்காளி சாலையில் கொட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.