கரூர் சிஎஸ்ஐ பள்ளியில் போதை பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி கரூர் சிஎஸ்ஐ மேல்நிலை பள்ளி வளாகத்தில் கரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் போதை இல்லா தமிழகம் உருவாகவும், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்பாட்டில் இருந்து மீளுதல் குறித்து கோட்டக் கலால் அலுவலர் சக்திவேல், குளித்தலை கோட்டக் கலால் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சார்லஸ் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்கள், பள்ளி மாணவ - மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.