காயம் பட்டவரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் மீது தாக்கு

55பார்த்தது
கரூரில் காயம் பட்டவரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் மீது தாக்குதல்.

கரூர் மாவட்டம், புலியூர், கோவில் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் வயது 33.

இவர் கரூரில்
108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கரூர் பசுபதிபாளையம், ஆண்டாள் நகரை சேர்ந்த கார்த்திக் வயது 26 என்பவர், ஜூன் 3-ம் தேதி மதியம் ஒரு மணி அளவில், கரூர் பேருந்து நிலையம் அருகே காயம் பட்டு கீழே கிடந்துள்ளார்.

இந்த தகவல் அறிந்த லோகேஷ் சம்பவ இடத்திற்கு சென்று, கார்த்திகை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் கொண்டு சென்றுள்ளார்.

செல்லும் வழியில், கார்த்திக் ஆம்புலன்ஸ் -இன் கதவை திறந்துள்ளார்.

இதனால், ஆம்புலன்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே நிறுத்திவிட்டு, கதவை திறக்க முயன்ற கார்த்திக்கை தட்டி கேட்டு உள்ளார் லோகேஷ்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கார்த்திக் லோகேஷ்-ஐ தகாத வார்த்தை பேசி, கைகளால் தாக்கினார்.

இது தொடர்பாக லோகேஷ் காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை முடிவில் லோகேஷிடம் தகராறு செய்தது, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கார்த்திக் என்பது தெரிய வந்தது.

கார்த்திக்கை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த தான்தோனி மலை காவல்துறையினர், காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி