கரூரில், விழிப்புணர்வு வார விழா- துவக்கி வைத்த DRO.

178பார்த்தது
கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாரத்தான் போட்டியினை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 என்பது தகவல்களை பெறுவதற்கு மட்டுமல்ல மக்களின் குறைகளை களைவதற்கு ஒரு நுழைவாயிலாக அமைகிறது என்பதையினை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மராத்தான் போட்டி நடத்த உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் அக்டோபர் 5 முதல் 12ம் தேதி வரை ஒவ்வொரு வருடமும் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து துவங்கி தாந்தோணி அரசு கலைக் கல்லூரி வரை சென்றடைந்தது.

இந்நிகழ்வில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி,
தனி வட்டாசியர் நேரு(இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் ) , கரூர் வட்டாசியர் வெங்கடேசன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி