கலைஞர் 102 வது பிறந்த நாள்- காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி.

79பார்த்தது
கலைஞர் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு வெண்ணைமலை அன்பு கரங்கள் இல்லத்தில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர்
மு. கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்த நாளை இன்று தமிழக முழுவதும் திமுக கட்சியினர் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 161 இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக இன்று பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் முதல் நிகழ்வாக கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்படும் அன்பு கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வரும் மாணவ - மாணவியர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் , முதியவர்கள் என அனைவருக்கும் இன்று காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி கட்சியின் நெசவாளர் அணி சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் , துணை மேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர்கள் கனகராஜ் , கோல்ட் ஸ்பாட் ராஜா உள்ளிட்ட பல்வேறு அணிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அனைவருக்கும் காலை உணவு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி