அண்ணாமலைக்கு அரசியல் நாகரிகமும் தெரியாது- ஜோதிமணி பேட்டி.

70பார்த்தது
அண்ணாமலைக்கு அரசியல் நாகரிகமும் தெரியாது. கரூரில் ஜோதிமணி குற்றச்சாட்டு கூறி பேட்டி.



கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக, கரூர் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வழங்கினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமசி, பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் நாகரிகமும், அரசியல் முதிர்ச்சியோ கிடையாது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் உட்பட எல்லோர் மீதும் சேற்றை வாரி இறைப்பது அவருடைய அரசியல். மக்களுக்கான பிரச்சினைகளுக்கு முன்பு நிற்பது கிடையாது.

லுலு மால் போன்ற நிறுவனங்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு பின்னர் அமைதி காப்பது ஏன். இடையில் கமிஷன் பெற்று விட்டாரா? என கேள்வி எழுப்பினார்.


அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த பொழுது 300 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார் என முன்பே அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அனைவர் மீதும் உள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு தமிழக கவர்னர் அனுமதி அளித்துள்ளார். ஆனால் எம். ஆர். விஜயபாஸ்கரின் ஒரே ஒரு கோப்பை மட்டும் ஆளுநர் கையெழுத்து போடவில்லை என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி