டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம்மோதி ஒருவர் உயிரிழப்பு.

57பார்த்தது
கருப்பம்பாளையம் பிரிவு அருகே நள்ளிரவில் டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு.

கரூர் மாவட்டம், சுக்காலியூர், கரட்டுப்பாளையம், ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் முருகன் வயது 51.

இவர் ஜூலை 28ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில், மதுரை- சேலம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

இவரது வாகனம் கருப்பம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, அதே சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, முருகன் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.


இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த முருகனுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.


இந்த சம்பவம் அறிந்த முருகனின் மனைவி அழகுராணி வயது 49 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த முருகனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அந்த வாகனத்தை ஓட்டிய நபர் யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி