முதியவர் மீது, அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து.

70பார்த்தது
முதியவர் மீது, அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து.
சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது, அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.


கரூர் மாவட்டம், விஸ்வநாதபுரி, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் வயது 67.

இவர் ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில், கரூர்- கோவை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.


அப்போது, ரெட்டிபாளையம் பகுதியில் செயல்படும் கரூர் பிரியாணி சென்டர் எதிரே சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது, மின்னல் வேகத்தில் வந்த ஒரு டூவீலர் சாலையை கடக்க முயன்ற தங்கவேல் மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.

இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த தங்கவேலுக்கு, நெற்றி, வலது கால் முட்டி, இடது கை முட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


இந்த சம்பவம் அறிந்த தங்கவேலுவின் மகன் ஸ்டாலின் வயது 44 என்பவர், இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த டூவீலர் எது? அந்த டூவீலரை ஓட்டிய நபர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

தொடர்புடைய செய்தி