தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் மாவட்ட மகளிர் துணை குழு அமைப்பாளர் முத்துமாரி தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் துணைக் குழு உறுப்பினர் தமிழ்மணி, மாவட்ட இணை செயலாளர் பிரவீனா, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க பொறுப்பாளர் விசாலாட்சி, தமிழ்நாடு ஆய்வாளர் நுட்புனர் சங்கம் மதி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில்,
"பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்பு" குறித்து மாவட்ட சமூக நல அலுவலர் சுவாதி கருத்துரை வழங்கினார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை முதல்வர் நளினி "அரசு பணியில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அதற்கான தீர்வுகளும்"என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்.