அழகர் டீ ஸ்டால் எதிரே நடந்த சென்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.
மூதாட்டி படுகாயம்.
கரூர், சின்னான்டான் கோவில், செல்வராஜ் தெருவை சேர்ந்தவர் மறைந்த பாலுசாமி மனைவி தனபாக்கியம் வயது 78.
இவர் ஜூலை 26 ஆம் தேதி காலை 8: 25- மணி அளவில், சின்னான்டான் கோவிலில் இருந்து திருச்சி-கரூர் செல்லும் பழைய பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் உள்ள அழகர் டீக்கடை எதிரே நடந்து சென்ற போது, வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, தனபாக்கியம் மீது மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த
தனபாக்கியத்திற்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தனபாக்கியம் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், தனபாக்கியம் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சேர்ந்த அந்த வாகனம் எது? அதன் ஓட்டுனர் யார்? என்று கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் நகர காவல் துறையினர்.