கரூரில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபா சார்பில் திருவிளக்கு பூஜை.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐயப்பா சேவா சங்கத்தில், அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின், அசோக் நகர் மகளிர் அணி சார்பாக 5-வது ஆண்டாக 2-வது ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
சிறப்பு திருவிளக்கு பூஜையை வழக்கறிஞர் குணசேகர் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அசோக் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மகளிர் அணியினர் 108 பேர் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.
திருமணத்தடை நீங்கவும், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரவும், வாழ்வில் இருள் நீங்கி வெளிச்சம் ஏற்படவும், மீனாட்சி அம்மன் மற்றும் தீபலட்சுமி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு செய்து, திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.