கரூர் அகில பாரத ஐயப்ப தர்ம பிரச்சார சபை சார்பில் ஐந்தாம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை நூறுக்கும் மேற்பட்ட 100- க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
கரூர் பசுபதீஸ்வரர் கோயில் அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பா
சேவா சங்கம் திருமண மண்டபத்தில் , அகில பாரத ஐயப்ப தர்ம பிரச்சார சபை சார்பில் ஆண்டுதோறும் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் கரூர் நகர பகுதியை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். பூஜையின் போது சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க பூஜையில் பங்கேற்ற பெண்கள் வேதமந்திரங்களை உச்சரித்து, உலக நன்மை வேண்டியும், ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் வேண்டியும் வணங்கினர்.
நிகழ்ச்சியில் பி எம் கே மேனன் மற்றும் ஐயப்பா தாஸ் இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட இந்நிகழ்ச்சியில் குணசேகர், ஆனந்தி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்