டூவீலரை வேகமாக ஓட்டியதால், கீழே விழுந்து விபத்து.

59பார்த்தது
டூவீலரை வேகமாக ஓட்டியதால், கீழே விழுந்து விபத்து.
வேகமாக டூவீலரை ஓட்டிச் சென்ற முதியவர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து விபத்து.


கரூர் அடுத்த வெங்கமேடு, சிவானந்தம் தெருவை சேர்ந்தவர் ரவி வயது 58.

இவர் மார்ச் 16ஆம் தேதி மதியம் 2: 20- மணி அளவில், அவருக்கு சொந்தமான டூவீலரில் மணப்பாறை- கரூர் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் அய்யம்பாளையம் அருகே சென்றபோது, வேகமாக டூவீலரை செலுத்தியதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த ரவியின் மனைவி மாலதி வயது 54 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை கவனக்குறைவாகவும் , விபத்து ஏற்படும் வகையில் வேகமாகவும் ஓட்டிய ரவி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி