சுக்காலியூரில் தனியார் நிறுவனத்தில் சிலிண்டர் தீப்பிடித்ததால் விபத்து.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுக்காலியூர் பகுதியில் செயல்படும் தனியார் மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் நிறுவனத்தில் நேற்று இரவு ஊழியர்கள் வெல்டிங் வைத்துக் கொண்டிருக்கும் போது அருகில் உள்ள கேஸ் சிலிண்டரில் திடீரென தீப்பற்றிவிபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு லாரிகள் முற்றிலும் எறிந்து சேதமடைந்தது.
மேலும் ஒரு பேருந்து 20% எரிந்து சேதம் அடைந்தது.
மேலும் அந்த நிறுவனத்தில் அமைத்திருந்த செட், கூடாரம் தீ விபத்தில் எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் அறிந்து கரூர் தீயணைப்பு மாவட்ட அலுவலர் வடிவேல் தலைமையிலான தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தீ விபத்தின் தாக்கம் அதிகம் இருந்ததால் மேலும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.
இதில் மொத்தம் ஐந்து தீயணைப்பு வாகனங்களும், தீயணைப்பு நிலைய வீரர்களும் சுமார் 5 மணி நேரம் போராடி நள்ளிரவு ஒரு மணிக்கு தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில்
பல லட்ச ரூபாய் மதிப்பில் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து கரூர் மாநகர காவல் துறையினர்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.