நள்ளிரவில் டூவீலரை களவாட முயன்ற இளைஞர் கைது

1581பார்த்தது
கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, தளவாபாளையம், பஜனைமட தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் ராமகிருஷ்ணன் (40). இவர் கரூர் பேருந்து நிலையம் பகுதியில் செயல்படும் பிரபல உணவகத்தில் சப்ளையராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், சம்பவதினத்தன்று இரவு ராமகிருஷ்ணன் தனது டூவீலரை தான் வேலை பார்த்து வரும் உணவகத்தின் அருகே நிறுத்தி விட்டு உறங்கச்சென்றுள்ளார். பின் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த இளைஞர் ஒருவரை டூ வீலரை திருட முயன்றுள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து ராமகிருஷ்ணன் அங்கு விரைந்து வந்து அந்த இளைஞரை பிடித்து வைத்து பின் இதுகுறித்து கரூர் மாநகர காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், திருட வந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர், அதில், கரூர், வெங்கமேடு, பழனியப்பா தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சீனிவாசன் (20) என்பது தெரியவந்தது. பின் அவர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி