மருத்துவ உதவி கேட்டு ஆட்சியரிடம் முறையிட்ட இளம்பெண்.

58பார்த்தது
மருத்துவ உதவி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் முறையிட்ட இளம்பெண்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி ஜோதி வயது 36.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் பன்னீர்செல்வம் சலவை தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இரண்டாவது பிரசவத்தின் போது ஜோதிக்கு கல்லீரல் செயல் இழப்பு நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கு 25 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போதிய வருவாய் இல்லாமல் குடும்பத்தை நடத்துவது சிரமமான சூழல் உள்ள நிலையில், தற்போது மருத்துவம் செய்து கொள்வதற்கு போதுமான பொருளாதார வசதி இல்லாததாலும், தனது இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் கருதி தமக்கு உயிர்காக்கும் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் இன்று வாராந்திர குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி