ராமகிருஷ்ணபுரம் கட்டுமான பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு.
கரூர் மாவட்டம், மாயனூர் காசா காலனியைச் சேர்ந்தவர் வெற்றிவேல் வயது 41.
இவரது சகோதரர் முருகவேல் வயது 43. மேலும் வெங்கமேடு என் எஸ் கே நகரை சேர்ந்த செல்வராஜ் வயது 30.
இவர்கள் மூவரும் ஜூலை 3ம் தேதி மதியம் 4: 30 மணி அளவில் கரூர் ராமகிருஷ்ணபுரம் வடக்கு விநாயகர் கோவில் தெருவில் ஒரு கட்டிடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இரும்பு பைப்புகளை மாடிக்கு எடுத்துச் செல்வதற்காக கொண்டு செல்லும் போது எதிர்பாராத விதமாக இரும்பு பைப் மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியதில் செல்வராஜ், வெற்றிவேல் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இருவரையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதில் சிகிச்சை பலனின்றி வெற்றிவேல் உயிர் இழந்தார்.
செல்வராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
முருகவேல் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த வெற்றிவேல் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.