ஏமூர்- டூவீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து.

61பார்த்தது
ஏமூர் அருகே டூவீலர் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.

மதுரை மாவட்டம், குண்டக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ரவிக்குமார் வயது 29.

இவர் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 8 மணி அளவில், திருச்சி - கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.


இவரது வாகனம் ஏமூர் குன்னூர் அருகே வந்தபோது,

எதிர் திசையில் திருச்சி மாவட்டம், முசிறி, புது பேருந்து நிலையம் எதிரே உள்ள அபிராமி தெருவை சேர்ந்த மோகன்ராஜ் வயது 51 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், ரவிக்குமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் டூவீலருடன் கீழே விழுந்த ரவிக்குமாருக்கு தலை, வலது கால் முட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவம் அறிந்த ரவிக்குமாரின் மனைவி சத்யா வயது 28 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மோகன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி