கிருஸ்துமஸ் விழாதேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது

60பார்த்தது
கரூரில், கிருஸ்துமஸ் விழா. தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.



கிருஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் 7ட இயேசு பிறப்பின் சிறப்பு திருப்பலி நேற்று இரவு உலகெங்கும் உள்ள தேவாலயங்களில் நடைபெற்றது.

அந்த வரிசையில் நேற்று இரவு கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள புனித தெரசம்மாள் ஆலயத்தில் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு சர்ச் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பங்குத் தந்தை மற்றும் உதவி பங்குத்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலியில் நூற்றுக்கணக்கான பங்கு மக்கள் கலந்து கொண்டு இயேசு கிறிஸ்துவை புகழ்ந்து பாடல்களை பாடியும், ஜெபங்கள் செய்தும் கிருஸ்து பிறப்பின் பெருமைகளை எடுத்துச் சொல்லி வழிபாடு நடத்தினர்.


வழிபாடு முடிந்த பிறகு கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.


நள்ளிரவில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சிறப்பு திருப்பலியை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி