நீச்சல் பழக சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

50பார்த்தது
நீச்சல் பழக சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, பழையூர் அருகே உள்ள பெரிய காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் மோகித் வயது 14.

இவர் கரூரில் செயல்படும் சிஎஸ்ஐ பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.

மோகித்துக்கு கடந்த 10 வருடங்களாகவே தசை நார் சிதைவு நோய் உள்ளது. இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.


மேலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி நீச்சல் பயிற்சியும் மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், ஜூலை 28ஆம் தேதி மதியம் 12: 00 மணி அளவில், கரூர், சுங்க கேட், தெரசா கார்னர் பகுதியில் உள்ள எலைட் நீச்சல் குளத்தில் நீச்சல் பழக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அறிந்த மோகித்தின் தாயார் கல்பனா வயது 33 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த மோகித்தின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி