தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வேளாண் உரிமைக்காக போராடி 59 உயிர்களை தியாகம் செய்து மின் இணைப்பு பெற்றுக் கொடுத்த தியாகிகளுக்கு வீரவணக்க பேரணி தடையை மீறி நடைபெற்றது.
தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழ்நாட்டில் வேளாண் உரிமை மின்சார இணைப்பு பெற்றிருக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுதோறும் சராசரியாக ஒரு லட்சத்து பத்தாயிரம் மின் கட்டணம் செலுத்துவதை 20 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி 59 உயிர்களை தியாகம் செய்து உரிமையை பெற்றுக் கொடுத்த உழவர் போராளிகளுக்கு வீரவணக்க பேரணி கரூரை அடுத்த தென்னிலை பகுதியில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்க கரூர் மாவட்ட செயலாளர் ராஜா மற்றும் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி மாநில தலைவர் சண்முகம் சுந்தரம் கலந்து கொண்டு வீரவணக்க பேரணியை தொடங்கி வைத்தார்.
தென்னிலை கால்நடை மருத்துவமனையிலிருந்து தொடங்கிய வீரவணக்க பேரணி தென்னிலை கடைவீதி பேருந்து நிறுத்தம் வரை நடைபெற்றது.
இந்தப் பேரணிக்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி பேரணியை நடத்தினார்.