கரூரில் அதிக வட்டி தருவதாக கூறி 50 லட்சம் பெற்று மோசடி செய்த நபர் கைது.
கரூர் பாரதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பாலமுருகன் வயது 35.
கரூரில் செயல்படும் தனியார் சிவில் இன்ஜினியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம், V. களத்தூரை சேர்ந்த பிரபு வயது 41 என்பவர் இயக்குநராக இருந்து கொண்டு, அவர் நடத்திவந்த GSDL வைபவ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் வட்டி மற்றும் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பி பாலமுருகன் இரண்டு தவனைகளாக ரூ. 20, 00, 000- முதலீடு செய்தார்.
இதேபோல் அரியலூர் மாவட்டம், தத்தனூர் கிராமத்தை சேர்ந்த கலைவாணன் என்பவரிடம் 3- தவணைகளில் ரூ. 30, 00, 000- பெற்று, பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதோடு, குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் கொடுத்த புகாரில், வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக கரூர் எஸ். பி. பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து தலைமறைவான பிரபு, கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இவரது வங்கி கணக்குகளை முடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர் காவல்துறையினர்.