கருப்பம்பாளையத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா, அப்பி பாளையம் அருகே உள்ள கருப்பம்பாளையம், அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் வயது 48.
இவருக்கு கடந்த சில வருடங்களாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
ஆயினும் இவருக்கு எதிர்பார்த்த அளவு குணமாகவில்லை.
இதனால் விரக்தி மனப்பான்மையில் வாழ்ந்து வந்த மோகன்ராஜ் பிப்ரவரி 19ஆம் தேதி மதியம் 3: 30 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மறுநாள் காலை இச்சம்பவம் அறிந்த மோகன்ராஜின் தந்தை கணேசன் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த மோகன்ராஜ் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோனிமலை காவல்துறையினர்.