நடந்து சென்றவர் மீது வாகனம் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம்

70பார்த்தது
ஆதி மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, சுங்க கேட், குடி தெரு அருகே உள்ள ஐயா சாமி நாடார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் வேம்படி மனைவி மாரியாயி வயது 65.

இவர் ஜூலை 7ஆம் தேதி மதியம் 2: 40- மணியளவில், ஆதி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பிரிவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் நடந்து சென்ற மாரியாயி மீது மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.

இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாரியாயிக்கு வலது கை, வலது கால் முட்டி, தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.


உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவம் குறித்து மாரியாயி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? வாகனத்தை ஓட்டிய ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி