ராயனூரில், கால் வலியால் அவதிப்பட்ட நபர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.
கரூர் மாவட்டம், ராயனூர் பகுதியில் செயல்படும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் பிரான்சிஸ் வயது 51. இவரது மனைவி விஜயலட்சுமி வயது 54.
பிரான்சிஸ் கடந்த மூன்று வருடங்களாக கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனையில் அவர் சிகிச்சை மேற்கொண்டும் அவருக்கு குணமாகவில்லை.
மேலும், கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப தகராறு எழுவதும் வழக்கம்.
இதனால் விரக்தி மனப்பான்மையில் வாழ்ந்து வந்த பிரான்சிஸ், ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 11 மணி அளவில், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மறுநாள் காலை (நேற்று) தனது கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அறிந்த விஜயலட்சுமி, இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த பிரான்சிஸ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.