பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்பு.

80பார்த்தது
கரூர்- பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்பு.

ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்டதிருமாநிலையூர் அமராவதி பாலம் Nஅருகே அமைந்துள்ள திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

அமைப்பின் மாவட்ட தலைவர் மதர்சா பாபு தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையின் போது ஆண்கள், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை மேற்கொண்டனர்.

இறைத்தூதரான நபியின் தியாகத்தை போற்றும் வகையில் உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதிகாலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து அனைவரும் ஒன்று கூடி பக்ரீத் திருநாள் சிறப்பு தொழுகையை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி