சித்தலவாய் அருகே சாலையை கடந்து நடந்து சென்றவர் மீது அரசு பேருந்து மோதி விபத்து.
திருச்சி மாவட்டம், தொட்டியம், சீனிவாசநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் வயது 77.
இவர் பிப்ரவரி 18ஆம் தேதி இரவு
8: 20 மணி அளவில், திருச்சி- கரூர் சாலையில் சித்தலவாய் பகுதியில் மீரா மட்டன் ஸ்டால் அருகே நடந்து சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது கரூர், வடக்கு காந்திகிராமம், ஜேஜே கார்டன் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் வயது 50 என்பவர் வேகமாக ஓட்டி வந்த அரசு பேருந்து, சாலையைக் கடக்க முயன்ற முருகேசன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு கரூர் ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த முருகேசனின் மனைவி குமுதவள்ளி வயது 65 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அரசு பேருந்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.