கரூர் புலியூரை சார்ந்த சுரேஷ்பாபு, ராதா தம்பதியினரின் மகன் சஜன் (வயது 10). இவன் பிறந்து 6 மாதத்திலிருந்து நடக்க முடியாமல் இருந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்த போது சிறுவன் முதுகு தண்டுவட மரபணு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதும், அதற்கு சிகிச்சை அளித்து சரி செய்ய கோடி கணக்கில் பணம் வேண்டும் என தெரியவந்தது. இந்நிலையில் வீட்டில் வைத்து பராமரித்தும், சிகிச்சை அளிப்பதுடன், அவரது தாய் படிப்பும் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார். 10 வயது ஆனதை அடுத்து கடந்த ஆண்டு 5ம் வகுப்பு அருகில் உள்ள கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துள்ளனர். இந்தாண்டு 6ம் வகுப்பு படித்து வருகிறான். கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பங்கு கொண்ட அச்சிறுவன் அண்ணல் அம்பேத்கர் குறித்து பேசியுள்ளான். அது அங்கு நடுவராக வந்த ஆசிரியர்களை ஆச்சரியமடைய வைத்தது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தனது தாய், தந்தை, பாட்டி மற்றும் ஆசிரியையுடன் வருகை தந்து சிறப்பு பரிசுக்கான சான்றிதழையும், 2 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் வழங்கி பாராட்டினார்.
தனது மகன் முதுகு தண்டுவட மரபணு பிரச்சினையால் பிறந்த 6 மாத முதல் கஷ்டப்பட்டு வருவதாகவும், அவனது சிகிச்சைக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தார்.