கோடையை சமாளிக்க நடைபாதை வியாபாரிகளுக்கு குடை வழங்கும் விழா.

66பார்த்தது
கரூரில் கோடையை சமாளிக்க நடைபாதை வியாபாரிகளுக்கு குடை வழங்கும் விழா நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிலே கோடைகாலத்தில் அதிக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

குறிப்பாக சாலையோர நடைபாதை வியாபாரிகள் தங்கள் பொருட்களை சாலை ஓரம் வைத்து வியாபாரம் செய்வதற்குள் மிகுந்த துயருக்கு ஆளாகி வருகின்றனர்.


அவர்களது துயரை போக்கும் வண்ணம் கரூர் மாவட்ட திமுக சார்பில், நடைபாதை வியாபாரிகளுக்கு கோடைகால குடை வழங்கும் விழா, கரூர் தலைமை தபால் நிலையம் அருகே தமிழக மின்சார மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

கரூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகள் ஆயிரம் பேருக்கு வழங்க திட்டமிட்டு இன்று முதல் கட்டமாக 200 பேருக்கு குடை வழங்கப்பட்டது.

குடைகளை பெற்றுக் கொண்ட நடைபாதை வியாபாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி