சிறுமிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் மீது குண்டாஸ் வழக்குபதிவு

64பார்த்தது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது குண்டாஸ் வழக்கு பயந்தது.

கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி பகுதியைச் சேர்ந்த மருதமுத்து மகன் விக்னேஷ் வயது 19. இவர்

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் ஆக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அதே பகுதியைச் சேர்ந்த ஆறு வயதுடைய சிறுமியிடம் ஆபாச வீடியோவை காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.


இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரில், கரூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி விக்னேஷ்-ஐ போக்சோ சட்டத்தின் கீழ் மார்ச் 5ஆம் தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் விக்னேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியர் தங்கவேலுவுக்கு பரிந்துரை செய்ததன் பேரில், ஆட்சியர் தங்கவேல் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள விக்னேஷ் இடம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை, கரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி