பாலம்மாள் புறம் அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. வாலிபர் படுகாயம்.
கரூர் மாவட்டம், புலியூர், புரவிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைமுருகன் வயது 38.
இவர் ஜூலை 25ஆம் தேதி மதியம் 12: 00 மணி அளவில், கரூர் - வாங்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் பாலம்மாள்புரம் இறைச்சி கடை அருகே வந்தபோது,
எதிர் திசையில் நாமக்கல் மாவட்டம், நல்லியம்பாளையம், கிழக்கு தெருவை சேர்ந்த தியாகராஜன் வயது 50 என்பவர் ஓட்டி வந்த அசோக் லேலண்ட் தோஸ்த் வாகனம், துரைமுருகன் ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த துரைமுருகனை மீட்டு அருகில் உள்ள நாதன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பாக துரைமுருகன் அளித்த புகார் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக சரக்கு வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தியாகராஜன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.