காலை சிற்றுண்டி திட்டம் சத்துணவு ஊழியர்கள் வழங்க வேண்டும்.

54பார்த்தது
முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்க வேண்டும்.
சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, மக்கள் பாதை அருகில் உள்ள நடராஜர் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் சந்திரசேகரன், பொது செயலாளர் நூர்ஜகான், பொருளாளர் சுப்பு காளை, மாவட்ட செயலாளர் சுந்தரம், பொருளாளர் கமலக்கன்னி, மாநில செயற்குழு உறுப்பினர் தங்கதுரை, உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் நிறைவில், மாநில மாநாட்டை முதலமைச்சரை அழைத்து நடத்துவதென தீர்மானம் இயற்றப்பட்டது.

மேலும், சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான காலி பணியிடங்களை போர்க்கள அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும்.

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை, மகளிர் சுய உதவி குழு மூலம் வழங்குவதை கைவிட்டு, சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்க வேண்டும்.

காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி