ஏ. பி. ஜே அப்துல் கலாம் நினைவு தினம் மரக்கன்று வழங்கும் விழா
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதிகளில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களின் 9 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அப்துல் கலாம் அவர்களின் சாதனையை போற்றும் வகையில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கோளரங்கம் காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் ரமேஷ் மற்றும் ஸ்ரீ அக்னிஸ் கல்வி குழுமத்தின் தலைவர் மணிவண்ணன் பள்ளியின் தாளாளர் கீதா மணிவண்ணன் பள்ளியின் முதல்வர் பகலவன் மற்றும் பள்ளி இருபால் ஆசிரியர்கள் பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு அப்துல் கலாமிற்கு புகழஞ்சலி செலுத்தினர்.