ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட நாள் 41 ஆண்டு

76பார்த்தது
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட நாள் 2.8.1984 ஐ தொடர்ந்து இன்று 41 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நாளை தமிழகம் முழுவதும் இயக்க நாளாக கொண்டாடி வருகிறோம்.

கரூர் வட்டாரம் மற்றும் நகரக் கிளைகள் சார்பாக கரூர் வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு இயக்க நாள் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை கரூர் வட்டாரச் செயலாளர் காக்ஸ்டன் ஜெரால்ட் டைட்டஸ் ஒருங்கிணைத்தார். கரூர் மாவட்ட பொருளாளர் தோழர் தமிழரசி அவர்கள் இயக்க கொடியேற்றி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் அருள்குழந்தைதேவதாஸ், மேனாள் கல்வி மாவட்ட செயலாளர் பிரான்சிஸ்டேனியல்ராஜா ஆகியோர்கள் இயக்க உரையாற்றினர். கரூர் வட்டார & நகரக் கிளையின் முன்னணி தோழர்கள் மீனா, கீதா, கோகிலா, மோகன், சீனிவாசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். கரூர் வட்டார தலைவர் ஜெயமணி நன்றி உரை கூறினார்

தொடர்புடைய செய்தி