4-அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆட்சியரிடம் மனுஅளித்த பெண்கள்

83பார்த்தது
4-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்த ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள்.


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க கரூர் மாவட்ட பணியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் எங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும். மற்றும் பணியாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மாவட்ட அலகில் இருந்து ஊதியம் விடுவித்தல் வேண்டும்.


பணி பாதுகாப்பு வேண்டும். பணி புதுப்பித்தல் மற்றும் பணி மதிப்பீடு செய்தல் ஆகியவற்றை கைவிடுதல் வேண்டும்.

பணியாளர்களின் எதிர்கால நலன் கருதி, வருங்கால வைப்பு நிதி, காப்பீடு மற்றும் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

பிற துறை சார்ந்த பணிகள் சுமத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி