கரூரில் நடைபெறும் மூன்றாவது புத்தகத் திருவிழாவை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் 3-வது கரூர் புத்தகத் திருவிழா இன்று துவங்கி தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் நடைபெறும் இந்த 3-வது புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏக்கள் புடை சூழ நேரில் சென்று பார்வையிட்டு வியந்தனர்.
தமிழகத்தின் தலைசிறந்த 84- முன்னணி புத்தக விற்பனை நிலையங்கள் சார்பாக புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த புத்தகக் கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு துறைகள் சார்ந்த படைப்புகள் அடங்கிய புத்தகங்கள், கலை, அறிவியல், பொறியியல், இலக்கியம், இலக்கணம் போன்ற பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் தனித்தனியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.