கரூரில் வாலிபரின் மொபைலை திருடிய பெங்களூரைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்துராஜபுரத்தை சேர்ந்தவர் பிரபு வயது 32.
மார்ச் 15ஆம் தேதி கரூர் பஸ் ஸ்டாண்டில் வெள்ளரிக்காய் வாங்குவதற்காக சென்று உள்ளார்.
அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூர் ஷரீப் நகரை சேர்ந்த நூரி வயது 35, லட்சுமி வயது 45, லீலா வயது 60 ஆகிய மூன்று பெண்களும் பிரபுவை கண்காணித்தனர்.
பிரபு வெள்ளரிக்காயை பார்த்து வாங்கி கொண்டிருக்கும் வேளையில், அவரது செல்போனை மூவரும் சேர்ந்து களவாடி விட்டனர்.
கன நேரத்தில் இதனை கண்ட பிரபு கூச்சலிடவே, பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த பொதுமக்கள், மூன்று பெண்களையும் சுற்றி வளைத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து பின்னர் அவர்கள் வந்தவுடன் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
மூவரையும் கைது செய்த கரூர் காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.