கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சியின் மாவட்ட செயலாளர் பி எம் கே பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் தமிழ்மணி, கரூர் மாநகர செயலாளர் ராக்கி முருகேசன் உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வரும் மே 11ல் மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா & சமூக நீதி மாநாட்டில் கரூரிலிருந்து 100- வாகனங்களில் 5, 000பேர் பங்கேற்பது எனவும், இதற்காக 5 குழு அமைக்கபடும் எனவும்,
கரூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், ஆறுகளை பாதுகாக்கவும், நீர்நிலைகளை வேறு எந்த ஒரு பயன்பாட்டிற்கும் அனுமதி வழங்குவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்திட வேண்டும் எனவும், வரும் மார்ச் 29-ல் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை அனைத்து ஊராட்சிகளிலும் நிறைவேற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
தமிழகத்தில் அதிக வெயில் அடிக்கும் பகுதியாக கரூர் மாவட்டம்,
க. பரமத்தி மாறி உள்ளது. சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த கால சூழ்நிலை மாற்றத்திற்கு இப்பகுதியில் அளவுக்கு அதிகமாக கல்குவாரிகள் உருவாகி வருவது தான். எனவே, கரூர் மாவட்ட நிர்வாகம் இது குறித்து கள ஆய்வு செய்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 தீர்மானங்களை நிறைவேற்றினர்.