3 தங்கம் 1 வெண்கலம் கரூர் பரணி வித்யாலயா பள்ளி அபார சாதனை

26பார்த்தது
20 வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டி அண்மையில் ஹரியானாவில் நடைபெற்றது. இப்போட்டியில் பரணி வித்யாலயா யாழினி 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தமிழ்நாடு சார்பாக பங்கு பெற்று குழு பிரிவில் 1 தங்கப்பதக்கமும், தனி நபர் மற்றும் இரட்டையர் பிரிவில் 2 தங்கப்பதக்கமும், ஸ்ரீவத்சன் குழு பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று அபார சாதனை படைத்துள்ளனர்.

மேலும் தென் கொரியாவில் நடைபெறும் சர்வதேச சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய சாப்ட் டென்னிஸ் அணியில் யாழினி ரவீந்திரன் இடம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் சாதனை படைத்து கரூருக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த யாழினி ரவீந்திரன், ஸ்ரீவத்சன் ஆகியோருக்கு பரணி வித்யாலயா பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் S. மோகனரங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன் மற்றும் அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர். பரணிக் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் C. ராமசுப்ரமணியன், முதல்வர் S. சுதாதேவி, துணை முதல்வர் R. பிரியா மற்றும் இருபால் ஆசிரிய, ஆசிரியைகள் சாதனையை பாராட்டி வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி