கரூரில், 2- வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை. குழந்தையின் தந்தை கைது.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வயது 30.
இவருக்கு மனைவி இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன் தினம் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, இரண்டு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கூலி தொழிலாளி கொடுத்துள்ளார்.
குழந்தை விழித்துக் கொண்டதால் குழந்தையை தூக்கிச் சென்று மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் தூக்கி வீசி உள்ளார்.
தூங்கிக் கொண்டிருந்த மகளை காணாத தாய் வீடு முழுதும் தேடிய போது, மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, தன் குழந்தையை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்த கரூர் மகளிர் காவல் துறையினர் குழந்தையின் தந்தையை கைது செய்துள்ளனர்.
பெற்ற குழந்தை இடமே பாலியல் தொல்லை செய்த தந்தையால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.