கரூரில் 2- தேங்காய்கள் ரூ. 31, 000 க்கு ஏலம் எடுத்த பக்தர்கள்

56பார்த்தது
கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 38 ஆம் ஆண்டு விழா கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக பல்வேறு பக்தி மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இன்று ஐயப்பன் கோவில் வளாகத்தில் 24 ஆவது ஆண்டாக ஸ்ரீ சீதா கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் பக்தர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக, சாமிக்கு படைக்கப்பட்ட இரண்டு தேங்காய்கள் பக்தர்களிடையே ஏலம் விடப்பட்டன. இவ்வாறு ஏலம் விடப்படும் தேங்காய்கள், ஏலம் எடுத்தவருக்கு நற்பலன்களை தரும் என்பதால், போட்டி போட்டு ஏலம் கேட்டு வருடம் தோறும் தேங்காய்களை ஏலம் எடுத்து வருகின்றனர். 

அதன் அடிப்படையில் இன்று சாமிக்கு படைக்கப்பட்ட இரண்டு தேங்காய்கள் ஏலம் விடப்பட்டதில், கரூரை சேர்ந்த துரைசாமி என்பவர் ஒரு தேங்காயை 16,000 ரூபாய்க்கும், வெங்கடேசன் என்பவர் மற்றொரு தேங்காயை 15,000 ரூபாய்க்கும் ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தொகையை பக்தர்களின் அன்னதான செலவிற்கு பயன்படுத்தப்படும் என நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஏலம் எடுத்தவர்களுக்கு இறைவனுக்கு படைக்கப்பட்ட தேங்காய்களை கொடுத்து, கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி