RTO அலுவலகம் முன்பு 2- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு மகாகவி மாற்று திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்கம் & மகாகவி மாற்றுத்திறனாளிகள் சமூக நல அறக்கட்டளை இணைந்து 2- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் ஜெயசுதா, பார்வை திறன் குழு தலைவர் காளிதாஸ், பொருளாளர் தமிழரசி, உள்ளிட்ட சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகை ரூ. 1500, கடுமையான 5- விதமான பாதிப்புகளுக்கு 2000, ஆதரவு தொகை ஆயிரம் என மொத்தம் ரூ. 3, 000-ம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையாக ரூ. 6000, கடும் பாதிப்புக்கு உயர் ஆதரவு தொகை 10, 000 வழங்கப்படுவது போல தமிழக முதலமைச்சர் வழங்க வேண்டும் எனவும்,
கரூர் மாவட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தும் வழங்கப்படாததால், விரைவாக மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.