10-ம் வகுப்பு பொதுதேர்வு 59 மையங்களில் 11, 487 எழுதினர்.

76பார்த்தது
கரூரில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 59 தேர்வு மையங்களில் 11, 487 மாணாக்கர்கள் எழுதினர்.

கரூரில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கு மாவட்டம் முழுவதும் 59 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.

இந்தத் தேர்வை மாவட்டத்தில் உள்ள 188 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 5, 706 பேர், மாணவிகள் 5, 781 பேர் என மொத்தம் 11, 487 பேர் இன்று எழுதினர்.

தனி தேர்வர்கள் 1103 பேர் , 7 மையங்களில் எழுதினர்.

இதில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவிகளை ஒருங்கிணைத்து, தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தலைமை ஆசிரியர் விளக்கி கூறினார்.


தேர்வு பணியில் அறை கண்காணிப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் என மொத்தம் 820 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள. தேர்வு பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி