கரூர்: போக்குவரத்து தொழிலாளர் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றம்

76பார்த்தது
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கரூர் மண்டல தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆண்டு பேரவைக் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) கரூர் மண்டல தொழிலாளர் சங்க ஏஐடியுசி ஆண்டு பேரவைக் கூட்டம் மண்டல தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் பொது குழு செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சக்திவேல், மாநில சம்மேளன துணை பொது செயலாளர் முருகராஜ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் இறுதியில், போக்குவரத்துக் கழகங்களில் காண்ட்ராக்ட் மற்றும் அவுட்சோர்சிங் முறைகளை அரசு முழுமையாக கைவிட வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கான பண பலன்களை ஒரு மாதக் காலத்திற்குள் வழங்க வேண்டும். பேருந்துகளில் பணி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமின்மை முறையை பின்பற்ற வேண்டும். கூடுதலாக இயக்கப்படும் கிலோமீட்டருக்கு ரூ.2.50 வீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி