இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 11 ஜோடிகளுக்கு திருமணம்.

65பார்த்தது
கரூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 11 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ள புகழ் சோழர் மண்டபத்தில் 11 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில் 11 ஜோடிகளுக்கு இந்து முறைப்படி வேத விற்பன்னர்கள் வேதங்கள் முழங்க முக்கிய பிரமுகர்கள் தாலியை எடுத்துக் கொடுக்க உறவினர்கள் முன்னிலையில் மணமகன்கள் மணமகள்களுக்கு தாலியை கட்டினர்.

அவர்களை அங்கிருந்த அனைவரும் அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்தனர். அதனை தொடர்ந்து அக்னி சுற்றியும், மாலை மாற்றியும், மெட்டி அணிவித்தும் மகிழ்ந்தனர்.


அவர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் குடும்பம் நடத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களும் சீதனமாக வழங்கப்பட்டது.

ஆலய வளாகத்தில் உறவினர்களிடமும், பெற்றோர்களிடம் மணமக்கள் ஆசீர்வாதம் வாங்கியும், புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி