நள்ளிரவில் டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு.
கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, கடைவீதி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரவி மகன் குரு பிரசாத் வயது 32.
இவரது நண்பர் மதுரை மாவட்டம், ஆதிகுளம், கனகுவேல்நகரை சேர்ந்தவர் மரியா பெனரோ ராஜன் வயது 33.
இவர்கள் இருவரும் டிசம்பர் 20ம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில், கரூர் - கோவை சாலையில் டூவீலரில் சென்றுனர்.
இவர்கள் வைரமடை செட்டிநாடு ஹோட்டல் அருகே சென்றபோது, எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மரியா பெனரோ ராஜன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்ற குரு பிரசாத்துக்கு பலத்த காயம் உடல் முழுவதும் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
டூவீலரை ஓட்டிச் சென்ற மரியா பெனரோ ராஜன்க்கு
பலத்த காயங்கள் ஏற்பட்டதால், அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக குரு பிரசாத்தின் தாயார் தனலட்சுமி அளித்த புகாரில், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த
குருபிரசாத் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தென்னிலை காவல் துறையினர்.