வீலர்-டிராக்டர் நேருக்கு நேர் மோதல். தாய் குழந்தை படுகாயம்.

51பார்த்தது
நொய்யல் அருகே டூ வீலர்-டிராக்டர் நேருக்கு நேர் மோதல். தாய் குழந்தையுடன் படுகாயம்.

ஈரோடு மாவட்டம், குப்பக்காடு , கந்தசாமி தெருவை சேர்ந்தவர் அபூபக்கர் சித்திக் வயது 32. இவரது மனைவி அனிஷா வயது 23. இவர்களது மகள் ஆயிஷா வயது 1.

இவர்கள் ஜூன் 8-ம் தேதி இரவு 7: 30 மணி அளவில், ஈரோடு - கரூர் சாலையில் அவரது டூவீலரில் வந்து கொண்டிருந்தனர்.


இவர்களது வாகனம் நொய்யல் பகுதியில் உள்ள தனியார் மண்டபம் அருகே வந்தபோது ,


எதிர் திசையில், கரூர் , வேட்டமங்கலம் மேற்கு , முன்னூத்து பாளையம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் வேகமாக ஓட்டி வந்த டிராக்டர் , அபூபக்கர் சித்திக் ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த அனிஷா மற்றும் குழந்தை ஆயிஷாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் , இருவரையும் மீட்டு கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பாக அபூபக்கர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , இதுதொடர்பாக டிராக்டரை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குணசேகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி