வையாபுரி நகர் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். 2பேர் படுகாயம்.

82பார்த்தது
வையாபுரி நகர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம்.

கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுகா, கடம்பன்குறிச்சி அருகே உள்ள சிவியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் லோகேஷ் வயது 22.

இவர் தற்போது கரூர் செங்குந்தபுரம் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் ஜூலை 26 ஆம் தேதி காலை 8. 30 மணி அளவில், கரூர்- கோவை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

இவரது வாகனம் வையாபுரி நகர் பிரிவு, குறிஞ்சி ஓட்டல் அருகே வந்தபோது, எதிர் திசையில் கரூர், ஆண்டான்கோவில், சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் வயது 68 என்பவர், அவரது டூவீலரில் வேகமாக வந்து, லோகேஷ் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் இருவரும் வாகனத்துடன் கீழே விழுந்ததில், இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது.


உடனடியாக இருவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் லோகேஷை ராமன் மருத்துவமனையிலும், தங்கவேலை அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


சம்பவம் தொடர்பாக லோகேஷ் அளித்த புகாரின் பேரில், டூவீலரை கவன குறைவாகவும், வேகமாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய தங்கவேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

தொடர்புடைய செய்தி