கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, இனங்கனூர் அருகே உள்ள சாளரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி செல்லாத்தாள் வயது 68.
இவரது கணவர் சாமிநாதன் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி இருந்து வந்துள்ளார்.
அவருக்காக பல்வேறு பணிவிடைகளை செல்லாத்தாள் செய்து வந்தார்.
இந்நிலையில் தனது கணவனை முழுமையாக கவனிக்க முடியவில்லை என்ற விரக்தியில் வாழ்ந்து வந்த செல்லாத்தாள், டிசம்பர் 26 ஆம் தேதி காலை 7 மணி அளவில் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை அறிந்த அவரது உறவினர் ராமசாமி வயது 49 என்பவர் செல்லாத்தாளை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அங்கு சிகிச்சையில் இருந்து வந்த செல்லாத்தாள் சிகிச்சை பலன் இன்றி டிசம்பர் 27ஆம் தேதி உயிரிழந்தார்.
எனவே, இச்சம்பவம் குறித்து ராமசாமி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், உயிரிழந்த செல்லாத்தாளின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.