தடா கோயில் பிரிவு அருகே டூ வீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. வாலிபர் படுகாயம்.
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, வடக்கு வ உ சி தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தி வயது 38.
இவர் டிசம்பர் 27ஆம் தேதி காலை 10: 30 மணி அளவில், கரூர் - மதுரை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.
இவரது வாகனம் தடா கோவில் பிரிவு அருகே வந்த போது,
எதிர் திசையில் கர்நாடக மாநிலம், பெங்களூர்,
சூரிஹள்ளி, நாலாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ காந்த்மதுல் வயது 43 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், திருமூர்த்தி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த திருமூர்த்தியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து திருமூர்த்தி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய
ஸ்ரீ காந்த்மதுல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.